விதையும் அறுவடையும்

மழையை நம்பி
மனைவியின் தாலியை விற்று
வானம் பார்த்த பூமியில்
விதை விதைத்தவனே !


ஆற்று நீர் வருமென்று
அண்டா குண்டா அடகுவைத்து
அரை வயிற்றுக்கு கஞ்சிகூட இல்லாமல்
இருக்கும் விதையை விதைத்தவனே !!

ஆற்றுநீரையும் மழைநீரையும் நம்பி
உடைமையே எல்லாம் விதைத்து
உயிரை அறுத்து விட்டான்
நம்ம ஊரு விவசாயி ....

                                                பெ.பாமா

Comments

Post a Comment