1 இரவுப்பெண்
மலைக்காற்று வீசிட
ஆண் ஆதிக்கம் குறைந்திட
மஞ்சள் அல்லி பூத்திட ...
ஆடை இல்லாத மேனிகொண்டு
மனதை கொள்ளை கொள்ளும் பெண்ணே !
என் நிலா பெண்ணே !!
2 நீயும் மனிதா
மலருக்குத் தெரியவில்லை
தனக்குள் தேன் உள்ளதென்று
வண்டு எடுத்ப்பின் உணர்கிறது
மலைக்குத் தெரியவில்லை
தனக்குள் சிலை உள்ளதென்று
சிற்பி வடித்தபின் அறிகிறது
இவையெல்லாம் சிறப்பாக விளங்கிறது
நீ .....
சிந்திக்கும் எண்ணம் இருந்தும்
மாக்களாய் அலைகிறாய்...
அறிவிருந்தும் அரக்கனாய் வாழ்கிறாய்
மனிதா நீயும் மனிதன் தானா ?
எண்ணிப்பார் ....
பெ.பாமா
Comments
Post a Comment